நடந்து முடிந்த பதினோராவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக வெற்றிபெற்று சென்னை ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தது. ஐதராபாத்துக்கு எதிரான இறுதி போட்டியில் அசால்ட்காக வெற்றி பெற்று கோப்பையுடன் நேற்று சென்னை திருப்பிய சென்னை அணிக்கு ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisment

அதை தொடர்ந்து நேற்று இரவு ஐபிஎல் நிர்வாகம் சார்பில் சென்னையில் ஒரு நட்சத்திர விடுதியில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது அந்த விருந்தில் பல முக்கிய நிர்வாகிகள்,பிரபலங்கள் கலந்துகொண்டுசென்னை அணியின் கேப்டன் டோனியை சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

dmk

அந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகனும் கலந்துகொண்டு டோனியை வாழ்த்தினார். அப்போது கேப்டன் டோனி சிஎஸ்கேவின் டோனி கையொப்பமிட்டமஞ்சள் நிற டி-ஷர்டை துரைமுருகனுக்கு பரிசளித்தார். அதை மகிழ்ச்சியுடன் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

Advertisment

என்னதான் தீவிரமாக அரசியல்களத்தில் துரைமுருகன் செயல்பட்டாலும் ஒரு கிரிக்கெட் மேட்சுகளை கூட அண்ணன் விடமால் பார்த்துவிடுவார் அந்த அளவிற்கு அவர்கிரிக்கெட் பிரியர் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.