Advertisment

மக்காச்சோளத்திற்கு செஸ் வரி; துணை முதல்வரிடம் வலியுறுத்திய துரை வைகோ  

Durai Vaiko urges Deputy Chief Minister to refund cess on maize

Advertisment

மக்காச்சோளத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செஸ் வரி விதிப்பைத் திரும்பப்பெற வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்,பியுமான துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட துரை வைகோ, “துணை முதல்வரிடம் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கான எனது கோரிக்கையை நேரில் வழங்கினேன். மக்காச்சோளத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செஸ் வரி விதிப்பைத் திரும்பப்பெற்று, அதனை விளைவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு வழங்கிட வேண்டும் என்ற எனது கோரிக்கையை, நேற்று (28.01.2025) சாரண சாரணியர் இயக்க சர்வதேச நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க திருச்சி வந்திருந்த துணை முதல்வர், ஆருயிர் சகோதரர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் வழங்கி, கோரிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன்.

இந்த கோரிக்கையை தமிழ்நாடு முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், வேளாண்துறை அமைச்சருக்கும் அஞ்சலில் அனுப்பியுள்ளேன் என்ற தகவலையும் துணை முதல்வரிடம் தெரிவித்தேன். விவசாயப் பெருங்குடி மக்களுக்கான எனது இந்த கோரிக்கையின் நியாயத்தை புரிந்துகொண்டு அதனை விரைந்து நிறைவேற்றித் தர உதவிடுமாறு துணை முதல்வரை கேட்டுக் கொண்டேன்”என்றும் தெரிவித்துள்ளார்.

mdmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe