Skip to main content

''துரை வைகோ நன்கு பேசுவார்... நானே எதிர்பார்க்கவில்லை'' - வைகோ பேட்டி!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

 '' Durai Vaiko speaks well ... I did not expect '' - Vaiko interview!

 

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தலைமையில் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் (20/10/2021) நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

கூட்டத்தில், கட்சியில் துரை வையாபுரிக்கு பொறுப்பு வழங்குவது, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன்பின் மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராகத் துரை வையாபுரி நியமிக்கப்பட்டார்.

 

 '' Durai Vaiko speaks well ... I did not expect '' - Vaiko interview!

 

மதிமுக தலைமைக் கழகச் செயலாளராகத் துரை வையாபுரி பொறுப்பேற்ற நிலையில், மதிமுகவிலிருந்து அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் வே. ஈஸ்வரன் பதவி விலகினார். ''எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது'' எனக் கருத்து தெரிவித்த ஈஸ்வரன், ''மதிமுகவில் வாரிசு அரசியல் இல்லாத நிலையில் அதனைத் திணிக்க வேண்டிய அவசியம் என்ன? துரை வைகோதான் மதிமுவை வழிநடத்த முடியும் எனக்கூறுவது ஏன்? காலம்தான் தலைவர்களை உருவாக்கியுள்ளது. ஆனால் மதிமுகவில் இந்த திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது'' எனவும் தெரிவித்தார். இது மதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

 '' Durai Vaiko speaks well ... I did not expect '' - Vaiko interview!

 

இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ''துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். மாவட்டச் செயலாளர்கள் துரைக்கு பெரிய பதவியாக கொடுக்க வேண்டும் என வற்புறுத்த ஆரம்பித்தார்கள். இந்தப் போராட்டத்திற்கு மத்தியில் தொண்டர்களின் விருப்பம் இப்படி இருக்கிறது, அவருக்கும் விருப்பம் வந்துவிட்டது. அந்த தகுதியும் இருக்கிறது. நன்கு பேசுகிறார். நான் எதிர்பார்க்கவில்லை. எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் வாக்கெடுப்பு நடத்தி துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மதிமுகவினர் 99 சதவிகிதம் அவர் வர வேண்டும், பொறுப்பு வழங்க வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

மறைந்த தொழிலதிபர் கே.என். ராமஜெயம் சிலைக்கு துரை வைகோ மரியாதை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Durai Vaiko honors statue of late industrialist KN Ramajayam

திமுக முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் உடன் பிறந்த சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயத்தின் 12ம் ஆண்டு நினைவு தினமான இன்று, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில் துரை வைகோ கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Durai Vaiko honors statue of late industrialist KN Ramajayam

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மற்றும் தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு. பூமிநாதன், மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் ஆ. பாஸ்கர சேதுபதி, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் பெல். இராசமாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.