இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 265 வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி காந்தி மண்டப வாளகத்தில் அமைந்துள்ள, அவரது சிலைக்கு மறுமலர்ச்சி தி மு கழக முதன்மை செயலாளர் துரைவைகோ மாலையிட்டு மரியாதை செய்தார்.
அப்போது, வீரப்பாண்டிய கட்டபொம்மனின் புகழ் ஓங்குக, வீரன் சுந்தரலிங்கத்தின் புகழ் ஓங்குக, வெள்லையத்தேவனின் புகழ் ஓங்குக, தியாக செம்மலின் புகழ் ஓங்குக என சாதி மத பேதமின்றி அனைவரின் பெயரையும் கூறிப்பிட்டு வணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்வில், ஏராளமான மதிமுக தொண்டர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.