தமுமுகவினர் திடீர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு!

va

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியில் நிறுவப்பட்டிருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக கொடிக்கம்பத்தை மர்ம மனிதர்கள் வெட்டிசாய்துள்ளனர்.

va

இச்சம்பவத்தை கண்டித்தும் கொடி கம்பத்தை வெட்டி சாய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமுமுக நகர தலைவர் இம்தியாஸ், செயலாளர் முகமது ரிஜால், மமக நகர செயலாளர் அலாவுதீன் மற்றும் அக்கட்சியினர் வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் பள்ளிவாசல் முன்பு சாலையில் இருசக்கர வாகனங்களை குறுக்கே நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வத்தலக்குண்டு மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வத்தலக்குண்டு போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளிக்கவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

vathalakundu
இதையும் படியுங்கள்
Subscribe