Advertisment

"கடந்த 10 ஆண்டுகால அவல ஆட்சி.." - டங் ஸ்லிப் ஆன ஓபிஎஸ்!

jkl

Advertisment

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல் திமுக அரசை கடுமையாக சாடினார். அதே போன்று இன்று நெல்லையில் பிரச்சாரம் செய்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் திமுக அரசை விமர்சனம் செய்து பேசினார். அவர் பேசும் போதும், " புரட்சி தலைவி ஏற்கனவே ஒருமுறை கூறியதை தற்போது நினைவுபடுத்துகிறேன். இந்த அதிமுகவை யாராலும் தொட்டுப்பார்க்க முடியாது. பல வெற்றிகளை இந்த இயக்கம் பார்த்துள்ளது. ஆகையால் எதற்கும் நாம் அஞ்சத் தேவையில்லை. தற்போது அம்மாவின் வார்த்தைகளை மீண்டும் உறுதியாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே அதிமுகவை வெற்றிபெற வையுங்கள் என்றார். இதற்கிடையே பேச்சின் நடுவே கடந்த 10 ஆண்டுகால அவல ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அவர் கூறியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe