Advertisment

விஜய்யின் வருகையால் இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது- செல்வப்பெருந்தகை பேட்டி

 Due to Vijay's visit, there will be no impact on the India alliance

Advertisment

கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், 'ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு ஆயிரம் ரூபாய் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களிடம் கையேந்தி ஆயிரம் ரூபாய் பெற்றும், அதனோடு ஒரு ரூபாய் சேர்த்து ஆயிரத்து ஒரு ரூபாயாக இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கும் போராட்டம், சென்னை சாஸ்திரி பவன் அலுவலகம் எதிரே உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு நாளை நடைபெறுகிறது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். நாளை தங்கள் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்த உள்ள நடிகர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். விஜயின் வருகையால் இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மத்தியில் தற்போது நடைபெற்று வருவது பாஜக ஆட்சியில். கூட்டணி ஆட்சி ஆகும். யுபிசி நேரடி பணி நியமன தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை தமிழக முதல்வர் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் எதிர்த்ததால் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

congress Selvaperunthagai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe