Advertisment

"கட்சியின் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, இது போன்ற தீவைப்பு சம்பவங்கள் நடக்கிறது"- அண்ணாமலை பேட்டி!

publive-image

Advertisment

கடந்த செப்டம்பர் 24- ஆம் தேதி திண்டுக்கல்லில் உள்ள குடைப்பாறைப்பட்டி பகுதியில் பா.ஜ.க.வின் மாநகர மேற்கு மண்டலத் தலைவர் செந்தில் பால்ராஜ், குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கு சில மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர்.

இந்த தீ விபத்து நடந்த இடத்தினை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டு சம்பவம் நடந்ததைப் பற்றி பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்துக் கொண்டார். பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, இது போன்ற தீ வைப்பு சம்பவங்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினரின் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுபோல் திண்டுக்கல்லில் நடந்த தீ வைப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

publive-image

Advertisment

இதில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக ஆங்காங்கே நடைபெற்ற தீவைப்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், உங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது பற்றி பத்திரிகையாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியதற்கு, முடிந்தால் கைது செய்யட்டும் எனக் கூறினார்.

pressmeet Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe