முன்விரோதம் காரணமாக வீடு சூரை - கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் தீ வைத்து நாசம்!


Advertisment


ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையத்தில் முன்விரோதம் காரணமாக வீடு சூரையாடப்பட்டு, கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் தீ வைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் 6-வது வார்டு பகுதியைச் சேர்ந்த ராம் பிரபு என்பவரது மனைவி தேவியை முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ராம் பிரபு இல்லாத நேரத்தில் வீட்டில் நுழைந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் அவரது வீட்டில் இருந்த பொருட்களை சூரையாடினர். இதில் ஒரு கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் தீ வைத்து நாசம் செய்துள்ளனர். இது குறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisment

- சக்தி