
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் இன்று தரிசனம் செய்ய வந்தார். ஜெயிலர் படம் வெற்றி அடைந்ததற்கும், வெளியாக உள்ள லால் சலாம் படம் மிகப்பெரிய வெற்றி அடையவும் அவர் அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டார்.
சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த சத்தியநாராயண ராவ் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் கருணையால் படம் வெற்றி அடைந்துள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை. அவர் அரசியலுக்கு வரவும் வாய்ப்பு இல்லை. ரஜினியின் நடிப்பில் ஞானவேல் இயக்கும் அடுத்த படம் 19ம் தேதி தொடங்குகிறது. ஜெயிலரை விட லால் சலாம் படம் மிகப்பெரிய வெற்றி அடையும். படம் நன்றாக வந்திருப்பதாக மகள் (ஐஸ்வர்யா) கூறியிருக்கிறார். நடிகர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் நிதி கொடுப்பார், எவ்வளவு கொடுப்பார் என்பது அவருக்கு தான் தெரியும்.
தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது பற்றி அரசியல்வாதிகள் தான் பேசுவார்கள். ரஜினிகாந்த்துக்கு சம்பந்தமில்லை. கர்நாடகாவிலும் தண்ணீர் இல்லை, அதனால் தரவில்லை'' எனக் கூறினார்.
Follow Us