/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a1598.jpg)
கோவை மாவட்டம் துடியலூரில் தன்னுடைய மகளின் உயிரிழப்புக்கு அவருடைய காதலன் தான் காரணம் என கருதி பெண்ணின் பெற்றோர் தரப்பு இளைஞரை கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை துடியலூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(27) என்பவர் கடந்த ஒரு வருடமாக டிரைவராக பணியாற்றி வந்தார். தமிழ்ச்செல்வனின் தாயார் பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யன் கொள்ளை கொண்டான் கிராமம். அந்த கிராமத்திற்கு அடிக்கடி சென்றுவந்த தமிழ்செல்வனுக்குஅந்த பகுதியைச் சேர்ந்த ஆனந்திஎன்பவருடன் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆனந்தியுடன் பழகிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வன் திடீரென திருப்பூரைச் சேர்ந்த வேறொரு பெண்ணையும் காதலித்து வந்ததாக தெரிகிறது. ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை தமிழ்ச்செல்வன் காதலித்து வந்த நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த ஆனந்தியை தமிழ்ச்செல்வன் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ஆனந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மகள் ஆனந்தியின் தற்கொலைக்கு தமிழ்செல்வன் தான் காரணம் என கருதிய பெண்ணின் தந்தை மலைக்கனி மற்றும் பெண்ணின் சகோதரன் ராஜாராம் ஆகியோர் நேற்று துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
விருதுநகரில் இருந்து இருசக்கர வாகனத்திலேயே வந்த அவர்கள் இன்று காலை 10 மணி அளவில் தமிழ்ச்செல்வனை செல்போன் மூலம் அழைத்துள்ளனர். அப்பொழுது வெளியே வந்த தமிழ்செல்வனை கத்தியால் தாக்கினர். மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதால் சம்பவ இடத்திலேயே தமிழ்ச்செல்வன் துடிதுடித்து கீழே விழுந்தார். வந்த இருசக்கர வாகனத்திலேயே தந்தையும் சகோதரரும் தப்பிச் சென்றனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் தமிழ்ச்செல்வனை சேர்த்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)