Advertisment

ஆதரவற்ற சிறுவர்களுக்கு புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்த துபாய் தமிழர்! 

ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் வசித்து வருபவர் அன்வர் அலி. இவர் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். துபாய் தி.மு.க. அணியில் உள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து திருச்சி வந்த அன்வர் அலி, கும்பகோணம் சுவாமிமலையில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பால் நடத்தப்பட்டு வரும், அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, அங்குள்ள 50- க்கும் மேற்பட்ட சிறுவர்களை, அருகில் உள்ள ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்றார்.

Advertisment

அதைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கு தேவையான புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்தார். குறிப்பாக, மாணவர்கள் தேர்ந்தெடுக்க ஆடைகளையே வாங்கிக் கொடுத்துள்ளார். தற்போது, இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருந்து வரும் நிலையில், வரும் மே 2- ஆம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது. அதனால், ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு புதிய ஆடை வாங்கிக் கொடுத்ததாக அன்வர் அலி தெரிவித்தார்.

Advertisment

பின்னர் சிறுவர்களுடன் குழு புகைப்படத்தையும் அன்வர் அலி எடுத்துக் கொண்டார்.

dubai Ramzan clothes
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe