Advertisment

திருச்சிக்கு வந்த துபாய் தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்; ஆட்சியர் அஞ்சலி

Dubai fire accident trihy collector pays homage in person

துபாயில் அல்ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் கடந்த 15 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் உடனடியாக வந்து கட்டடத்தில் இருந்தவர்களை வெளியேற்றினர். தீயணைப்பு வீரர்களின் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பயங்கர தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் இந்தியர்கள் என்பது தெரிய வந்தது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தம்பதி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த துபாயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நிவாரணம் அறிவித்தார்.

Advertisment

இந்த விபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம் மற்றும் குடு (எ) முகமது ரபிக் ஆகியோரின் உடல்கள் இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அவர்களின் உடல்களுக்கு மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

dubai trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe