Advertisment

ரிசார்டில் நடந்த டிடிவி தினகரன் மகளின் நிச்சயதார்த்தம்!

Advertisment

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரினி. இவருக்கும், தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதில் டிடிவி திகனகரனின் சகோதரன் பாஸ் என்கிற பாஸ்கரன் உட்பட இரண்டு குடும்பத்தாரின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சுவாமிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்தது.

மணமகனின் தாத்தா துளசி அய்யா வாண்டையார் கடந்த 1991–96லில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் நேற்று நடைபெற்ற இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe