“வேலை செய்யவிடாமல் செய்கிறார்” - டி.எஸ்.பி. சுந்தரேசன் பரபரப்பு பேட்டி!

mayiladuthurai-dps-sundaresan

மயிலாடுதுறையில் மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றி வரும் சுந்தரேசன் தன்னுடைய வீட்டில் இருந்து மதுவிலக்கு அலுவலகத்திற்கு ஒரு கிலோ மீட்டர் வரை நடந்தே சென்ற வீடியோ காட்சி வைரலாகியது. அதே சமயம் அவருக்காக வழங்கப்பட்டிருந்த வாகனத்தை மாவட்ட காவல்துறை தலைமை எந்தவித காரணமும் தெரிவிக்காமல் திரும்பப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மற்றொரு புறம் மாவட்ட காவல்துறையோ டி.எஸ்.பி.யின் வாகனம் பழுது காரணமாக சரி செய்ய எடுத்து செல்லப்பட்டுள்ளது. மாற்று வாகனம் வழங்கப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளது. 

இந்நிலையில் டி.எஸ்.பி. சுந்தரேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைக்கு எனக்கு ஒரு கஷ்டம் என்னன்னா எனக்கு மேல் இருக்கிற உயர் அதிகாரி மாவட்ட கண்காணிப்பாளர் ஒரு மறுப்பு அறிக்கை கொடுத்திருக்கிறார். அதுதான் வேதனையாக இருக்கிறது. அதாவது வாகனமே என்கிட்ட இருந்து பறிக்கப்படவில்லை அப்படியென்று சொல்கிறார். ஊடகத்தினரை அழைத்து தவறான செய்தியெல்லாம் போடாதீர்கள் அப்படியென்று சொல்கிறார். கடந்த 5.7.2025ஆம் தேதி காவல்துறையைச் சேர்ந்த என்னுடைய டிரைவர் வடிவேல் என்பவர் காரில் இருக்கிறார். அப்போது இந்த மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர். எஸ்.ஐ. செந்தில்குமார் என்பவர் வந்து இந்த வாகனம் உடனடியாக அமைச்சர்  மெய்யநாதன் பாதுகாப்புக்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். நான் அதற்குச் சொன்னேன் அரசு உத்தரவு இல்லாமல் மாதிரி கொடுக்க முடியாது.

2வது நான் இன்டென்சிவ் ரைடில் இருக்கிறேன். இந்த வாகனத்தை நான் கொடுக்க முடியாது. அப்படி இந்த வாகனத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு உத்தரவு கொடுங்கள். நான் வண்டியைக் கொடுக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு வடிவேல் கிட்ட அந்த ஏ.ஆர்.எஸ்.ஐ. நான் உங்கள் டி.எஸ்.பி. கிட்ட பேசிக்கிறேன்னு சொல்லிவிட்டார். அதற்கு வடிவேலுவும் நீங்கள் டி.எஸ்.பி. கிட்ட பேசிக்கங்கன்னு சொல்லிவிட்டார். உடனடியாக அந்த ஏ.ஆர்.எஸ்.ஐ. என்கிட்ட பேசுறாரு. நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். மேலும் அந்த இன்ஸ்பெக்டர் நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருந்துகொண்டு வண்டியை உடனடியாக அனுப்புங்கன்னு சொல்கிறார். 

நான் அதற்கு நான் சொன்னேன் இந்த உத்தரவை நீங்கள் எனக்குப் பிறப்பிக்க முடியாது. எனக்கு மேலதிகாரிகள் சொன்னால் தான் நான் வண்டியை அனுப்ப முடியும். உத்தரவு இல்லாமல் வண்டி அனுப்ப முடியாதென்று சொன்னேன். உடனே அடுத்த 10நிமிடத்தில் மைக்ல நாகராஜ் கண்ட்ரோல் ரூம் அவர் எனக்குக் கட்டளையிடுகிறார். உடனடியாக நீங்கள்  திருச்செந்தூர் பாதுகாப்புப் பணிக்குச் செல்லுங்கள் என்று சொல்கிறார். அதன்பிறகு நான் அங்கு இருக்கும்போதே எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து ஒரு உத்தரவு வருகிறது. அதில் திருவாரூர் வரும் முதல்வர் பாதுகாப்புக்கு உடனடியாக நீங்கள் போகவேண்டும் என்று இருக்கிறது.

நான் சொல்கிற பதிவுகள் எல்லாமே ஜி.டி.ல. இருக்கிறது. எதையுமே மறைக்க முடியாது. ஒழிக்க முடியாது. இந்த மாவட்டத்தில் இருக்கிற அனைத்து காவலர்கள், அதிகாரிகள் எல்லாருக்கும் தெரியும். இங்க என்ன கொடுமை நடந்துகிட்டு இருக்கிறது. இதற்குக் காரணம்  ஒருவர் எஸ்.பி. ஸ்டாலின், இன்னொருவர் ஆய்வாளர் ஸ்பெஷல் பிரான்ச் பாலசந்தர் எஸ்.பி.யை கூட  ஒரு அதிகாரியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த பாலசந்தர் என்னை மட்டும் இல்லை பல அதிகாரிகளைத் துன்புறுத்துகிறார். வேலை செய்யவிடாமல் செய்கிறார். இந்த மாதிரி பிரச்சனை செய்கிறார்” எனப் பேசினார். 

car DSP Mayiladuthurai police
இதையும் படியுங்கள்
Subscribe