
தமிழ்நாட்டில் தளர்வுகளற்றமுழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுவந்த நிலையில்ஜூன் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் நாளையே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு முட்டைகளுடன்கூடிய உலர்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சத்துணவு திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கு உலர்பொருட்களாக மாணவர்களுக்கு அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் பத்து முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் உலர்ப் பொருட்கள் சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)