அரசு மது விற்பனையை செய்வதை தடை செய்தால் குடிமகன்கள் எங்காவது சென்று எதையாவது குடித்து விட்டு உயிரிழந்துவிடுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம்
இந்த வருட தீபாவளி மதுவிற்பனை போன வருடத்தைவிட அதிகரித்துள்ளது இது அரசின் சாதனையா அல்லதுமக்களின் வேதனையாஎன்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,
மது விற்பனையை அரசு வேண்டும் என்று ஏற்றுக்கொண்டு செய்யவில்லை ஆனால் மது விற்பனையைநிறுத்தினால்இங்குள்ள குடிகாரர்கள் பாண்டிச்சேரி அல்லது கர்நாடகா சென்று மது என்ற பெயரில் எதையாவது குடித்துஉயிரிழந்துவிடுவார்கள் என கூறினார்.