ஈரோட்டில்மின் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அப்போது சூரம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது தர்ணா போராட்டத்திற்காகப் போடப்பட்டிருந்த பந்தல்முன்பாக, இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த ஒருவர்திடீரென ரகளையில் ஈடுபடத்தொடங்கினார்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்த நபரை சமாதானப்படுத்தி அனுப்ப முயற்சி செய்தனர். இருப்பினும் அவர், அங்கிருந்து செல்லாமல்நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில், 'நான் வண்டியை தள்ளிட்டு போவேன், இல்ல இங்கேயே மல்லாக்க படுத்து கிடப்பேன்' எனக்கூறி போலீசாரிடம் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். சுமார் 30 நிமிடமாக போலீசாரை அந்த நபர் பாடாய்ப்படுத்தி எடுத்தார். இதையடுத்து அவரை குண்டுக்கட்டாகத்தூக்கி ஆட்டோ மூலமாக அனுப்பி வைத்தனர். போதை ஆசாமியின் ரகளை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.