'Drunken son-in-law slashed his mother-in-law'- police investigation

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியைச் சேர்த்தவர் வசந்தமாள்(65) இவர் தனது மகள் மஞ்சீஸ்வரியை காதலித்து திருமணம் செய்து கொண்ட மருமகன் சந்திரசேகர் (47) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். சந்திரசேகர் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.

Advertisment

இதனிடையே தினமும் குடித்துவிட்டு தனது மாமியார் வசந்தம்மாளிடம் சந்திரசேகர் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு குடிபோதையில் வந்த சந்திரசேகர் தனது மாமியார் வசந்தம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது வாக்குவாதம் முற்றிய நிலையில் தேங்காய் உரிக்கும் கத்தியை எடுத்து மாமியாரின் கை, கை விரல்கள் தலை மார்பு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிய நிலையில் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

அங்கிருந்த பொதுமக்கள் சந்திரசேகரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட மருமகனே மாமியாரை கத்தியால் வெட்டிய சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.