Advertisment

'மதுபோதையில் அரிவாள் வெட்டு'-ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மனைவி

'Drunken sickle cut'-Wife found dead in a flood of blood

மதுபோதையில் கணவனே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

தென்காசி மாவட்டம் கருவந்தா கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். மது போதைக்கு அடிமையான சுரேஷ் அவ்வப்போது குடித்து விட்டு மனைவி சிவனம்மாளிடம் சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல்மது போதையில் வந்த சுரேஷ் சிவனம்மாளிடம் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட மோதலில் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவி சிவனம்மாளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

Advertisment

பின்னர் சாலைக்கு வந்த சுரேஷ் சாலையில் படுத்துக்கொண்டு தன் மீது பேருந்தை ஏற்றும் படி கத்தியுள்ளார். அங்கிருந்தவர்கள் சுரேசை சமாதானம் செய்ய முயன்றபொழுது அருகில் உள்ள கிணற்றில் குறித்து தற்கொலைக்கும் முயன்றுள்ளார். சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த ஊத்துமலை போலீசார் ரத்த வெள்ளத்தில்இறந்து கிடந்தசிவனம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளி சுரேசை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். கட்டிய மனைவியை மதுபோதையில் கணவனே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் கருவாந்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

police TASMAC thenkasi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe