Advertisment

போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு தகராறு செய்த போதை ஆசாமி; வெளுத்து வாங்கிய நடத்துனர்

 drunken passenger had fight with conductor

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, காரவள்ளியை நோக்கி 52 ஆம் நம்பர் அரசுப் பேருந்து சென்று வருகிறது. இந்த பேருந்து வழக்கம்போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போது, மதுபோதையில் இருந்த ஆசாமி ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார்.

Advertisment

அப்போது அந்த போதை ஆசாமியிடம்நடத்துனர், எங்க போக வேண்டும் என டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், ஒரு ஊரின் பெயரை சொல்லி டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் அந்தஊருக்கு இந்தபேருந்து போகாது, வேற பஸ் மாறி ஏறிட்டிங்கஎன்று நடத்துனர் கூற, எதையும் கண்டுகொள்ளாத அந்த நபர் அந்த ஊருல கொண்டுபோய் விடுங்க... என போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு அடம்பிடித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, கடுப்பான அந்த போதை ஆசாமி, நடத்துனரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

Advertisment

இதனால், அதிர்ச்சியடைந்த பயணிகள், பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து கீழே இறங்கிய நடத்துனர் மற்றும் போதை ஆசாமி ஒருவருக்கொருவர், மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போதை ஆசாமியை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

bus namakkal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe