போதை கணவர்; முகத்தில் சுடு ரசத்தை ஊற்றிய மனைவி! 

drunken  Husband trouble

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ளஜெயம்கொண்டான்கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன்(30). இவரது மனைவி குப்பம்மாள்(28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நடராஜன் செஞ்சி பேருந்து நிலையத்தில் தின்பண்டம் விற்பனை செய்து வருகிறார்.சமீபகாலமாகச்சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு மது குடித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

ஒரு முறை நடராஜன் மதுபோதையில், மனைவி குப்பம்மாள் முகத்தில்பிளேடால்கீறியுள்ளார். இது குறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குப்பம்மாள் புகார் அளித்து மகளிர்போலீசார்அப்போது இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் நடராஜன். அதோடு மனைவியிடம்தகராற்றில்ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் தகராறு முற்றியுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த குப்பம்மாள், அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த ரசத்தை எடுத்து கணவன் முகத்தில் வீசியுள்ளார். அந்த சூடு தாங்கமுடியாமல் நடராஜன் அலறித் துடித்துள்ளார்.

அதன்பிறகே தானே செஞ்சி மகளிர் காவல்நிலையத்திற்குசென்று மனைவி மீது புகார் அளித்துள்ளார். நடராஜன்நினலயைபார்த்த அங்கிருந்த மகளிர்போலீசார், அவரைவலுக்கட்டாயமாகச்செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுஅங்குச்சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். மதுபோதையில் இருந்ததால்சிகிச்சை கொடுத்தமருத்துவர்களுக்குஒத்துழைக்க மறுத்து வெளியே வந்துவிட்டார் நடராஜன். பின்னர் 108ஆம்புலன்ஸ்மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe