விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் |(35 வயது). கொத்தனாரான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், வெற்றிவேல் மற்றும் ஹரிஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.

Advertisment

Drinking habits

குடிப்பழக்கம் உள்ள செந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே சரிவர வேலைக்கு செல்லவில்லை. குடும்பத்தைக் காப்பாற்றாமல் தினசரி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த 10ஆம் தேதி சித்ரா கூலி வேலைக்கு சென்ற பிறகு அவர் வீட்டில் வைத்திருந்த அவரது கால் கொலுசை திருட்டுத்தனமாக செந்தில் எடுத்து சென்று அதை 1500 ரூபாய்க்கு அடகு வைத்து அந்தபணத்துடன் டாஸ்மாக் கடைக்கு சென்று குடித்துவிட்டு மாலை நேரத்தில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்துள்ளார்.

Advertisment

அப்போது அவரது மனைவி சித்ரா உனக்கு குடிப்பதற்கு ஏது பணம் என்று கேட்டு சண்டை போட்டுள்ளார். செந்தில் போதையில் தள்ளாட சந்தேகமடைந்த சித்ரா, தான் வைத்திருந்த கால் கொலுசை வீட்டுக்குள் தேடிப் பார்த்தபோது கிடைக்கவில்லை. அதை எடுத்துக்கொண்டு போய்தான் தனது கணவர் அடகு வைத்து அந்தப் பணத்தில் குடித்துவிட்டு வந்துள்ளதை அறிந்த சித்ரா கோபத்தின் உச்சத்துக்கு சென்றார்.

இதனால் கணவன் - மனைவி இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. சித்ரா அவர் வீட்டு முன் நின்றிருந்த ஸ்கூட்டரில் இருந்து பெட்ரோலை பிடித்து வந்து போதை மயக்கத்தில் படுத்திருந்த கணவர் செந்தில் மீது ஊற்றி தீ வைத்தார். சூடு தாங்காமல் செந்தில் அலறி துடித்துள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தினர் யாரும் வந்து எட்டி கூட பார்க்கவில்லை. ஒரு கட்டத்தில் சித்ராவே 108 ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி வரவழைத்து தீக்காயம் பட்ட கணவரை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Advertisment

தகவலறிந்த கண்டமங்கலம் போலீசார் விரைந்து வந்து சித்ராவிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே குடிகார கணவன் மீது பெட்ரோலை ஊற்றி மனைவியே கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீக்காயம் பட்ட செந்தில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.