/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a72397.jpg)
திருமணம் நடக்காததால் மது போதைக்கு அடிமையான இளைஞர் வீட்டில் தகராறு செய்த நிலையில் தந்தையே மகனை அடித்துக் கொன்ற சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி கொல்லங்கோடு அருகே உள்ளது சிலுவைபுரம். இந்தப் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவருக்கு ஜினு, ஜிஜின் என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஜினுவுடைய மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜினுவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் பெண் தேடி வந்தனர். ஆனால் யாரும் ஜினுவிற்கு பெண் கொடுக்க முன் வராததால் விரக்தியில் இருந்துள்ளார் ஜினு.
அதனைத் தொடர்ந்து மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜினு தனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவில்லை எனப் பெற்றோரிடம் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன் அன்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஜினு தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொழுது சைக்கிள் செயினை கொண்டு தாக்கியுள்ளார். அதே நேரம் செல்வராஜும் தேங்காய் உரிக்கும் கம்பியை எடுத்து ஜினுவை ஓங்கி அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜினு துடிதுடித்து இறந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அடுத்த நாள் காலையில் செல்வராஜ் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இரண்டாவது திருமணம் செய்து வைக்கவில்லை எனச் சண்டையிட்ட மகனை தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரி கொல்லங்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)