சேலம் அருகே, குடிபோதையில் பெற்ற மகளென்றும் பாராமல் தவறாக நடக்க முயன்ற தந்தையை, தற்காப்புக்காக ஆட்டுக்கல்லால் தாக்கி மகளே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆவடத்தூர் ராஜாகோயில் வலவு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் படவெட்டி (40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நளா (37). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

Advertisment

 Drunken 'close-up' father; Daughter beaten;near Salem

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

படவெட்டிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அதனால் அவர் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததால், அவருடைய மனைவி நளா, தன் இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

Advertisment

ஆனாலும், மாமியார் வீட்டுக்குச் சென்று அங்கேயும் படவெட்டி அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுட்டு வந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை (பிப். 26) இரவு குடிபோதையில் மனைவியைப் பார்க்கச் சென்ற படவெட்டி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதோடு, அவரை வீட்டுக்குள் தள்ளி, கதவை வெளிப்புறமாக தாழிட்டார்.

பின்னர், வெளியே நின்றிருந்த தனது மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். குடிபோதையில் இருந்த தந்தையை கீழே தள்ளிய மகள், அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் பலமாக தாக்கினார். அதன் பின்னரும் மகளிடம் பலவந்தப்படுத்தினார். வேறுவழியின்றி அருகில் இருந்த ஆட்டுக்கல்லை தூக்கி தந்தையின் தலை மீது போட்டார். இதில் படவெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதன்பின், வீட்டுக்குள் அடைப்பட்டிருந்த தனது தாயை மீட்ட மூத்த மகள், ஜலகண்டாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நளா, அவருடைய இரு மகள்கள் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையுண்ட படவெட்டி, ஏற்கனவே சில முறை தனது மூத்த மகளிடம் தவறாக நடக்க முயற்சித்திருப்பது தெரிய வந்தது. சம்பவத்தன்றும், தன்னை பாதுகாத்துக் கொள்ளவே ஆட்டுக்கல்லை தூக்கி தந்தை தலையில் போட்டதாகக் கூறியுள்ளார்.

குடிபோதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை, மகளாலேயே கொல்லப்பட்ட சம்பவம் ஆவடத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.