தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகில் உள்ள புதுவிடுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக தகவல் அறிந்து பட்டுக்கோட்டை மதுவிலக்கு போலீசார் பிடிக்கச் சென்றனர்.
மது விற்பனை செய்வதாக கூறப்பட்ட புதுவிடுதி அருள் மற்றும் அவரது உறவினராக ரவுடி பட்டியலில் உள்ள இளங்கோ ஆகிய இருவரும் புதுவிடுதி பாலம் அருகே நிற்பதை அறிந்து அவர்களிடம் செந்தில்குமார் என்ற ஏட்டு போய் கேட்க உடனே ஏட்டு செந்தில் குமாரை சாலையிலேயே தாக்கி சட்டையை பிடித்து இழுத்தபோது அதில் ஒருவன் அருகில் கிடந்த கட்டையை எடுத்துக் கொண்டு ஏட்டைதாக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சாராய வியாபாரியும், ரவுடியும் போலீசாரைதாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.