Drunkards breaking private bus windows; The civilians who ran away

திருவாரூர் அருகே தனியார் பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. கல்வீசி உடைத்துவிட்டு தப்பியோடியவர்களை விரட்டிப்பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

Advertisment

திருவாரூர் அருகே அம்மையப்பன் கடைவீதியில் திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் செல்லும் ஒரு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்தச் சமயம், மதுபோதையில் வந்த மர்ம நபர்கள் செங்கற்களை பேருந்தின் கண்ணாடி மீது வீசியதில் பேருந்தின் கண்ணாடி முழுவதும் உடைந்தது.

Advertisment

திடீரென கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்தில் இருந்த பயணிகள் பெண்கள் குழந்தைகள் என அனைவருமே அலறி அடித்து கீழே இறங்கி ஓடினர். பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை பேருந்தில் இருந்த பயணிகள் சிலரும், அந்த இடத்தில் நின்ற மக்களும் விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தனியார் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.