Drunk woman obstructs traffic on road

மதுபோதையில் இருக்கும் பெண் ஒருவர்தள்ளாடிக்கொண்டே போக்குவரத்தை சரி செய்யும் வீடியோ காட்சிகள்சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisment

திருப்பூர் மாவட்டம் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்வரி. இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புஇறந்து விட்டார். இதையடுத்து, நாளடைவில் மதுபோதைக்கு அடிமையான மகேஷ்வரிமது அருந்துவதை வழக்கமாக வைத்துக்கொண்டு அக்கம்பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதியன்று திருப்பூரிலிருந்து பொள்ளாச்சி வந்த மகேஷ்வரிஅன்றைக்கு அதிகளவில் மது அருந்தியுள்ளார். பின்னர், போதை தள்ளாடிய நிலையில்என்ன செய்வது எனத் தெரியாமல் பொள்ளாச்சி காந்தி சிலைக்கு அருகே உள்ள சிக்னல் பகுதியில்அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்துள்ளார். ஒருகட்டத்தில் தலைக்கேறிய போதையால் தத்தளித்த மகேஷ்வரிதிடீரென சாலையின் நடுவே சென்று போக்குவரத்தை சரி செய்துள்ளார்.

அப்போது, “டேய் பைக் கார தம்பி.. உனக்கு இப்ப ரெட் சிக்னல். நீ வண்டிய நிறுத்து.. அண்ணே பஸ்காரண்ணே உங்களுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தாச்சி.. நீங்க கெளம்பலாம். டேய் டேய் டேய் யாரா அவன்.. நடுவுல வண்டிய விடுறது. உனக்குலாம் ஃபைன் போட்டா தான் சரியா வரும்” எனகுடிபோதையில் ட்ராஃபிக் போலீசாகவே மாறிய பெண்மணிஅங்கிருந்தவர்களிடம் டான்ஸ் ஆடிக்கொண்டே வம்பிழுத்துள்ளார்.

Advertisment

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மகேஷ்வரியை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது அந்த பெண்மணி திடீரென நடுரோட்டில் படுத்துக்கொண்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளார். மேலும், இந்த பெண்ணால் படாதபாடுபட்ட போலீசார், ஒருவழியாக அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தற்போது, இந்த வீடியோ காட்சிகள்பொதுமக்களிடையே அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.