/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1002_160.jpg)
ஈரோடு மாவட்டம் பவானி சின்ன புலியூர் கரட்டுபுதூர் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார்(45). டிராக்டர் டிரைவர். இவருக்கு திருமணமாகி அன்னக்கிளி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா். செந்தில்குமாருக்கும், அன்னக்கிளிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், செந்தில்குமார் கடந்த 3 ஆம் தேதி இரவு பூலப்பாளையம் அண்ணாசிலை அருகே ஓடை பாலத்தில் மது குடித்து கொண்டிருந்தார். ஆனால், இரவு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தம்பி தங்கமணி நேற்று முன்தினம்(4.3.2024) செந்தில்குமாரை தேடி பூலப்பாளையம் சென்றபோது, அங்குள்ள ஓடை பாலத்தில் அவரது பைக், காலணி போன்றவை இருந்தது. ஓடையில் பார்த்தபோது, செந்தில்குமார் ஓடை தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார் செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமார் மதுபோதையில் ஓடையில் தவறி விழுந்து மூழ்கி இறந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)