மதுபோதையில் பெண் காவலர் மீது தாக்குதல்; இளம்பெண் கைது

Drunk attack on female policeman; The girl was arrested

சென்னையில் மது போதையில் பெண் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்ட பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் மதுபோதையில் இளம்பெண் ஒருவர் பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் பெண் காவலரைத்தாக்கிய புகாரில் ரேகா என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான பெண் காவலர் முத்துலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் விநாயகபுரத்தைச் சேர்ந்த ரேகா கைது செய்யப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மதுபோதையில் கீழே விழுந்து கிடந்த ரேகாவை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மருத்துவரையும் ஆபாசமாகப் பேசி உள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு காவலர் முத்துலட்சுமியையும் தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Chennai police TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe