Skip to main content

முறுங்கை விலை கிலோ ரூ. 320... ஏக்கமாக தொட்டு பார்த்துவிட்டு செல்லும் பொதுமக்கள்!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

klj

 

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் முருங்கைக்காய் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக காய்கறிகள் விலை கடுமையான அளவுக்கு உயர்ந்தது. குறிப்பாக தக்காளி விலை கிலோ 160 ரூபாய் வரை விற்றது. தக்காளி விலை பொதுமக்களை வாட்டி வதைத்ததால், தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலைக்குத் தக்காளி விற்பனையைத் தொடங்கியது. இதனால் தக்காளி விலை தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு அடுத்த நாளே வெகுவாக குறைந்தது. தற்போது கிலோ தக்காளி 90 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இன்னும்  ஐந்து அல்லது ஆறு நாட்களில் தக்காளி விலை 50க்கும் கீழாக குறையும் என்று கூறப்படுகின்ற நிலையில், முருங்கைக்காய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக 180, 200 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவந்த முருங்கைக்காய், தற்போது சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏக்கத்தோடு முருங்கைக்காயைப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மதுபானங்களின் விலை உயர்வு’ - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
 tasmac announcement for price hike

மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுபானங்களின் விலை உயர்வு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325மி.லி., 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
Chief Minister M. K. Stalin gave happy news to milk producers

ஆவின் பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 35 ரூபாயிலிருந்து 38 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாயிலிருந்து 47 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்தின் மேலாண்மை இயக்குநர் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆவின் நிறுவனம் 3.87 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு 05.11.2022 முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு, பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 44 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமேயாகும். இந்தச் சூழ்நிலையில், இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Chief Minister M. K. Stalin gave happy news to milk producers

இந்தக் கோரிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டு, இடுபொருட்களின் விலை உயர்வை ஈடுசெய்திடவும், பால் உற்பத்தியை உயர்த்தி கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு வழங்கிட வழிவகுத்திடவும், ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகையாக ஆவின் நிறுவனத்தால் 18.12.2023 முதல் வழங்கிடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35லிருந்து ரூ.38 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 44லிருந்து ரூ. 47 ஆகவும் உயரும். இதன்மூலம் சுமார் நான்கு இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.

பால் உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோர் நலனையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும். பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து அதிக அளவில் பால் உற்பத்தி செய்து, கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு பால் வழங்கி, 'பொருளாதார மேம்பாடு அடைவதுடன் கிராமப் பொருளாதாரம் உயர்ந்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென்று ஆவின் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.