Advertisment

50 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்; பொத்தேரி போலீஸ் குவிப்புக்கு காரணம் 

nn

பொத்தேரி பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பலிடம் மொத்தமாக 50 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு அருகில் உள்ளது பொத்தேரி. இந்த பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு குறைவு அதிகாரிகள் கடந்த 29/08/2024, 30/08/2024 ஆகிய இரண்டு நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது சென்னையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப் பொருளை கடத்த திட்டமிட்ட கும்பல் பிடிபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வழியாக சென்ற வாகனத்தை பிடித்து ஆய்வு செய்த போது ஒரு கும்பல் 10 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மெத்தபெட்டமைன் எனும்போதைப் பொருளைக் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.

Advertisment

இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு இது தொடர்பாக மேலும் ஆறு பேரை கைது செய்துள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து 1.30 கோடி ரூபாய் பணமும் 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாகவே நேற்று(31/08/2024) பொத்தேரி பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கி இருக்கும் தனியார் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக குவிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்திய 21 மாணவர்கள் மற்றும் போதைப் பொருட்களை விற்ற ரவுடி ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 21 மாணவர்கள் மற்றும் ரவுடியிடம் இருந்து மொத்தமாக 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

police Drugs Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe