Skip to main content

வீட்டில் கிலோ கணக்கில் போதைப்பொருள் !! ; சிட் பண்ட் மேனேஜர் தலைமறைவு !!

Published on 27/06/2018 | Edited on 27/06/2018

 

 

தமிழகம் முழுவதும் போதை பொருள்கள் தடை செய்யப்பட்டு வருகிறது  அப்படி இருந்தும் கூட ஆங்காங்கே  போதை பொருள்களை கடத்தி வைத்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதுபோலதான் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேட்டுப்பட்டி அருகே உள்ள ராமர்பிள்ளை தோட்டத்தில் வசித்து வரும் சர்வ சரஸ்வதி சிட் பண்சில் மேனேஜராக இருக்கும் முத்துரத்தனம் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருள்களை திண்டுக்கல்லில் உள்ள உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியான நடராஜன் மற்றும் செல்வம் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் திடீரென விசிட் அடித்து கடத்தி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர். 

 

 

 

இதுபற்றி மாவட்ட  உணவு பாதுகாப்பு நியமன அதிகாரியான நடராஜனிடம் கேட்டபோது, இன்று காலை பத்துமணி அளவில் எனக்கு சென்னையிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில் அந்த வீட்டை அதிரடி சோதனை செய்தோம் அப்பொழுது  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான கணேஷ். கூல் லிப், விமல் போன்ற போதை பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை எடுத்து ஆய்வு செய்த போது இரண்டு டன் பெருமானம் உள்ள 20 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்களை பறிமுதல் செய்தோம். ஆனால் இந்த போதை பொருளை பதுக்கி வைத்து இருந்த முத்துரத்தனவேல் தலைமறைவாகி விட்டார்.

 

இந்த பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை ஆய்வுக்கு அனுப்பிய பின் அதை அழிக்க இருக்கிறோம் என்று கூறினார். இப்படி திண்டுக்கல்லில் போதை பொருட்கள் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.