திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பெல் நிறுவனம், எச்.ஆர்.டி.சி உணவகம் முன்பு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பெல் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நாகூர்கனி என்பவர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 100 கிராம் எடையுள்ள குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.