Drugged youth clash at temple festival

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியில் கோவில் திருவிழாவில் இருதரப்பு இளைஞர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியலில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி தீர்த்தவாரி ஊர்வலம் எடுத்துக்கொண்டு மேளதாளம் முழங்க அன்னதானப்பட்டியில் மாரியம்மன் கோவில் நோக்கி மக்கள் புறப்பட்டனர்.

அப்பொழுது கோவிலின் அருகே வந்த பொழுது கூட்டத்திலிருந்த இளைஞர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த பெரியவர்கள் மற்றும் விழாக்குழுவினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.