drug trafficking; Police investigation on D. Malai Kriwala road

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் போதைப் பொருட்கள் பழக்கம் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது அங்கு சோதனையானது நடைபெற்று வருகிறது.

Advertisment

திருவண்ணாமலை கிரிவலப்பாதை, மத்திய பேருந்து நிலையம், சமுத்திரம் காலனி பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்றுள்ளது. அண்மையில் இதேபோல சென்னையில் தனியார் பல்கலைகழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மாணவ மாணவிகள் போதை பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக வெளியான புகார்களைத் தொடர்ந்து அந்தப்பகுதியில்தங்கி இருக்கும் விடுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் காலை நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

Advertisment