சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்திய வழக்கில் முன் ஜாமீன் கோரிய இரண்டு வழக்குகளை நீதிபதி வேலுமணி விசாரித்தார்.
அப்போது போலீஸ் தரப்பில் கூடுதல் பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஜோதிக்குமார் ஆஜராகி, முன் ஜாமீன் தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். தமிழக அரசு குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இத்தகையோருக்குமுன் ஜாமீன் அளித்தால், குட்காவை தொடர்ந்து விற்பார்கள். எனவே, முன் ஜாமீன் தரக்கூடாது என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வேலுமணி, இரண்டு முன் ஜாமீன் வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்.