சென்னை ராயப்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ராஜி என்பவர் சந்தேகமான முறையில் மரணமடைந்த நிலையில் இந்த மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மரணமடைந்த ராஜி என்பவருடைய மனைவி கலா தன்னுடைய கணவனை போதை மறுவாழ்வு மையத்தில் பணியாற்றுபவர்கள் அடித்து கொன்றுவிட்டதாகக் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்துள்ள அண்ணாசாலை போலீசார் இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த போதை மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் தலைமறைவான நிலையில் சதீஷ், கேசவன், யுவராஜ், சரவணன், செல்வமணி ஆகிய ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் அந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 12 நோயாளிகள் கீழ்பாக்கம் போதை மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.