Skip to main content

ஜந்து வருடமாக பெட்ரோலின் போதையில் சிறுவன்! -காப்பற்றி உதவ வேண்டுகோள்!

Published on 03/11/2019 | Edited on 03/11/2019

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கஸ்பா தெருவில் வசித்து வருபவர்கள் செல்வம்- தேவி தம்பதியினர். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும்  இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் 10 வயது கொண்ட இரண்டாவது பையனான ஜெய், ஆறு வயது முதல் ஒவ்வொரு நிமிடமும் பெட்ரோலின் வாசனையை பிடித்து போதை மயக்கத்தில்  வாழ்ந்து வருகிறார். சிறு வயது முதல் ஜெய்  தனது அப்பாவின் இருசக்கர வாகனத்தில் முன்புறம் அமர்ந்து செல்லும்போது, பெட்ரோல் டேங்கில் வரும் வாசனையை பிடித்து கொண்டும், இரு சக்கர வாகனம் பெட்ரோல் இல்லாமல் நிற்கும் போது, பெட்ரோல் டேங்கில் ஜெய்யை ஊத சொல்லி பழக்கப்படுத்தியுள்ளனர். அப்போது பெட்ரோல் வாசனையில் வரும் போதையில் தள்ளாடிய சிறுவன் ஜெய் தொடர்ந்து, 5 வருடமாக அவ்வாசனையை பிடித்து போதை மயக்கத்தில் வாழ்ந்து வருகிறார்.

 

drug in petrol... incident in cuddalore

 

பெட்ரோலின் போதை பழக்கத்துக்கு அடிமையான ஜெய்யின் செயல்பாட்டை அறிந்த பெற்றோர்கள் பலமுறை கண்டித்தும், எச்சரிக்கை செய்து பார்த்தும், கேட்காத சிறுவன் ஜெய் போதை மயக்கத்தில் கற்களாலும், பெற்றோர்களிடம் சண்டையிடுவதுமாக இருந்துள்ளார் என்று அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். சுமார் ஜந்து வருடங்களுக்கு மேலாக பெட்ரோலின் வாசனை மூலம் போதை பழக்கத்தில் ஈடுப்பட்டு வரும் தனது மகனை மீட்க வேண்டும் என்று ஏழ்மையில் உள்ள பெற்றோர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் போதிய பணம் இல்லாததால் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். மேலும் பெட்ரோல்  வாசனையை மிகவும் பிடித்ததால் தொடர்ச்சியாக ஜந்து வருடங்களாக வாசனையை பிடித்துக்கொண்டு இருப்பதாகவும், தான் இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சித்தும் முடியவில்லை என்று சிறுவன் ஜெய் கூறுகிறார்.

 

drug in petrol... incident in cuddalore

 

தனக்கு பெட்ரோலின் வாசனை பிடித்து போனதால், பெட்ரோலை இருசக்கர வாகனத்தில் இருந்து எடுத்து, பாட்டில்களில் நிரப்பி போதை மயக்கம் தெளிந்த பின், வாசனை பிடித்து கொள்வேன் என்று கூறுகின்றார். எப்போதும் பெட்ரோலை பாட்டிலில் நிரப்பிக்கொண்டு, போதையில் தள்ளாடும் 10 வயது கொண்ட சிறுவனை மீட்டு தரக்கோரி, ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர். பெட்ரோலின் வாசனையால் சரிவர உணவு அருந்துவதில்லை என்றும், பள்ளிக்கு செல்வதில்லை என்று கூறும் பெற்றோர்கள், தனது மகனை காப்பற்றவதற்கு அரசு மூலமாகவோ, தன்னார்வ தொண்டு மூலமாகவோ உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் கிழிப்பு; ஆட்டோவில் வந்தது யார்?

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
NN

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

Tearing down notice pasted at Jaber Sadiq's house; Police investigation

அதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் சாந்தோம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கடந்த புதன்கிழமை வந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதோடு, வீட்டிற்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒன்றை ஒட்டிவிட்டு சென்றிருந்தனர். இப்பொழுது வரை ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஆட்டோவில் வந்த ஜாபர் சாதிக்கின் தாயார் உறவினர் ஒருவருடன் வந்து நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கிழித்தெறிந்ததோடு, வீட்டிற்கு புதிய பூட்டு ஒன்றை போட்டு பூட்டிவிட்டு அவரும் தலைமறைவாகியுள்ளார். அவர் வந்த ஆட்டோ எண் மற்றும் அவருடன் வந்த உறவினர் யார் என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.