Advertisment

போதைப்பொருள் பார்சல்: விமான நிலையத்தில் கைதான வாலிபர்!

Drug parcel: A youth arrested at the airport

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களோடு பார்சல் மூலம் போதைப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்குத்தகவல் கிடைத்தது. திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு பார்சல் அனுப்ப வந்த நபர் ஒருவரைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Advertisment

மேலும் அவர் கொண்டுவந்த பார்சல் வெளிநாட்டுக்கு அனுப்ப வந்தது தெரிய வந்தது.அவரிடம் விசாரணை நடத்தியபோது அதில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான 10 கிலோ எடை கொண்ட போதைப்பொருள்கள் வெளிநாட்டுக்குக் கடத்த இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜீயபுரம் அருகே உள்ள எட்டரைக்கோப்பு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

airport arrest trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe