Advertisment

போதையிலிருந்து மீண்டுவர அறிவுரை கொடுத்த நண்பனை போதை ஊசி போட்டு கொல்ல முயன்றவர்கள்!!!

திருச்சியில் கஞ்சா, போதை, சரக்கு என தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தலைவிரித்து ஆடுவதால் திருச்சியில் அடிதடி, கொலை, திருட்டு என நாளுக்கு நாள் அதிகாரித்துக்கொண்டே வருகிறது. எளிதில் கிடைத்துவிடும் போதையில் இளைஞர்கள் வெகுவாக போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதை விட கொடுமை இவர்களை போதையில் இருந்து தப்பித்து இயல்பு வாழ்க்கைக்கு வாழ சொன்ன நண்பனுக்கே தூங்கும் போது போதையில் போதை ஊசி போட்டதால் கைகள் அழுகும் நிலைக்சென்ற கொடுமை திருச்சியில் நடந்திருக்கிறது.

Advertisment

drug

திருச்சி சத்திரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் நேபாளத்தைச்சேர்ந்தவர். இவர் திருச்சியில் கூர்க்கா வேலை செய்து கொண்டுயிருக்கிறார். இவரது பெற்றோர் இறந்து விட்டதால், அக்கா வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வந்தார். இரவு நேரத்தில் சின்னமார்க்கெட் கடை மாடி மற்றும் அன்னதான சத்திரத்தில் தங்குவது வழக்கம். அவருடன் அவரது உறவினர் குமார் என்பவரும் தங்கியுள்ளார். இந்நிலையில் குமாரின் நண்பர்கள் அருண், தர்மா ஆகிய இருவரும் மாடி அறையில் தங்கியிருந்தனர். போதை மருந்து உட்கொள்ளும் பழக்கமுடைய இருவரும், போதை ஊசியும் அடிக்கடி உடலில் செலுத்தி வந்தனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இவர்களோடு கூட இருந்த அஜித்குமார் கண்டித்து, அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அருண், தர்மா இருவரும், கடந்த சில நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமாரின் இடது கையில் போதை ஊசியை செலுத்தி உள்ளனர்.

இதனால் அஜித்குமார் வலியால் துடித்து நிலையில் ஒரு நாட்களில் ஊசி செலுத்தப்பட்ட பகுதி மரத்து கருத்து போனதால் பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தார். போதையில் ஊசி போட்டதால் நரம்புகளில் ஊசி போடுவதற்கு பதிலாக தசைப்பகுதியில் ஊசி போட்டதால் மருத்து சதை பகுதியில் இறங்கி அவருடை கை கருப்பு அடைய ஆரம்பித்துள்ளது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதையடுத்து, திருச்சி அடுத்த ஒரு எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அஜித்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வந்தனர்.

மேலும் போதை மாத்திரை எங்கு விற்பனை நடக்கிறது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். திருச்சியில் உள்ள மெடிக்கல்களில் முக்கியமான காந்திமார்க்கெட், மத்திய பேருந்து நிலையம், புத்தூர், அரசு மருத்துவனை பகுதியில் தடைசெய்யப்பட்ட மருந்துகள், மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து கொடுப்பதால் இந்த போதைக்கு அடிமையானவர்களுக்கு மெடிக்கல் கடைகளில் ஈசியாக கிடைப்பதால் அவர் போதையின் அடிமையாகவே வாழ்கிறார்கள்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

அஜித் நண்பர்கள் அருண், தர்மா, போதை மாத்திரை விற்றதாக திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள மெடிக்கல் கடை யில் தொடர்ந்து வாங்கியிருப்பது விசாரணையில் தெரிந்ததால் ஊழியர் வெள்ளையன் (எ) சுரேஷ் பாபு, உரிமையாளர் வசந்தா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அறிவுரை செய்த நண்பக்கு நண்பர்களே போதை ஊசி போட்ட கொடுமை திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Drugs India Tamilnadu trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe