The drug addicts who attacked the women in the hospital - the women who handed them over to the police

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு அவசர சிகிச்சை பிரிவு, ஆண்கள் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு , பெண்கள் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலன், பிரசவ பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

Advertisment

இந்த வார்டுகளில் 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மார்ச் 5ஆம் தேதி இரவு போதை ஆசாமி ஒருவர் குடிபோதையில் பெண்கள் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு சென்று, தூங்கிக்கொண்டிருந்த சில பெண்களிடம் சில்மிஷம் செய்து, தகாத வார்த்தைகளில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த இரண்டு பெண்கள் அந்த இளைஞரின் சட்டையை பிடித்து கன்னத்தில் பளார், பளார் என அடித்து பட்டையைக் கிளப்பினர். இதனால் மருத்துவமனை வளாகமே பரபரப்பானது. அவனை பிடித்து வைத்துக் கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குடியாத்தம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போதை ஆசாமியிடம் விசாரணை செய்தபோது வேலூர் பகுதியைச் சேர்ந்த சுகுமார் என தெரியவந்தது. சுகுமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment