விடாத மழையிலும் தாக்கிக்கொண்ட போதை ஆசாமிகள்

The drug addicts attacked in the rain

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் போதையில் வந்த சிலர் சாலையிலேயே சண்டையிட்டுக் கொண்டசம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

சென்னை 100 அடி சாலையில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் ஆட்டோவில் வந்த சில நபர்கள் மது போதையில் இருந்தனர். அதேபோல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் ஆட்டோவில் உரசியதாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திடீரென ஆட்டோவிலிருந்து இறங்கிய போதை நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் மோதலில் ஈடுபட்டனர்.

அருகில் இருந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பொதுமக்களால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ஒருபுறம் சென்னையில் பரவலாக மழை பொழிந்து வரும் சூழலில் மழையிலேயே போதை நபர்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலையில் தாக்கிக்கொண்ட கொள்ளும் இந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai TASMAC traffic
இதையும் படியுங்கள்
Subscribe