மதுரை அருகே உச்சகட்ட போதையில் இளைஞர் ஒருவர் சாக்கடையில் விழுந்ததுகூட தெரியாமல் சாக்கடை நீரில்தூங்கிக் கொண்டிருந்த வீடியோகாட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை கருப்பாயூரணி சீமாநகரில்உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் சுமார் 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உச்சகட்ட போதையில் தன்னிலை மறந்து கழிவுநீரில் படுத்து உறங்கி உள்ளார்.
போதையில் தடுமாறி உள்ளே விழுந்த அந்த இளைஞர், தான் எங்கே இருக்கிறோம் என்பதைக் கூட மறந்து சாக்கடை நீரில் தூங்கும் இந்த காட்சி காண்போரை முகம் சுளிக்க வைத்தது.