Skip to main content

மருத்துவர் கு.சிவராமனின் அமுது உணவகம்

dr.sivaraman amuthu restaurantகடந்த 25 ஆண்டுகளாக சித்த மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் கு.சிவராமன் வெறும் மருத்துவப் பயிற்சி மட்டுமல்லாது தொடர்ச்சியாக பாரம்பரிய உணவை, உழவை மீட்டெடுக்கும் பணியை நம்மாழ்வார் வழியில் செய்து வருகின்றார். சித்த மருத்துவத்தின் அடித்தளம் உணவு. அதற்கு மிகப் பொருத்தமாய், அவர் நடத்தும்  சித்த மருத்துவமனையின் அடித்தளத்தில் அவர் உணவகத்தை தொடங்கியிருக்கிறார். 
 

திருச்சியில் சிறுதானிய உணவகமான ஆப்பிள் மில்லட்டின் தொழில் நுட்பத்தைப் பெற்று அவர்களோடு இணைந்து, இந்த உணவகத்தை தொடங்கியிருக்கிறார். நாம் அடிக்கடி சொல்லி வரும் நம் உணவுப்பொருளின் மதிப்பு கூட்டும் விஷயம்தான் அமுது.

 

dr.sivaraman amuthu restaurant


இன்று சிறுதானியங்களுக்கு ஒரு புது முகவரி. மருத்துவர் சிவராமன் மூலம் அதன் முழு மருத்துவ பலனையும், அமுது உணவகம் மூலம் கூடுதல் மதிப்பும் சுவையும் கிடைக்கப் போகின்றன. பாரம்பரிய சிறுதானிய உணவு என்றாலே சுவை கொஞ்சம் கம்மியாக இருக்குமோ, எந்த அளவு தரமான சரியான பொருள் அது என்கிற கேள்விகள்  நிறைய முன் எழுகின்றன. இப்போது, இரண்டுக்குமே பதிலளிக்கும் விதமாய் தரத்தை உறுதி செய்து, சுவையின் மதிப்பை கூட்டி அமுது படைக்கின்றார்கள், ஆரோக்கியக் குடும்பத்தினர்.

 

dr.sivaraman amuthu restaurant


''கடைக்குட்டிச்சிங்கம்'' படத்தில் உழவன் மகனாய் நடித்தவர் கார்த்தி. வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இப்படம் ஈட்டிய பணத்தின் பெரும் பகுதியை உழவர் சமூகத்துக்கு திரும்பிக் கொடுக்க வேண்டும் என்கிற கார்த்தியின் எண்ணத்தால் உருவானது உழவன் பவுண்டேஷன். கடந்த பொங்கல் தினம் அன்று, உழவில் கோலோச்சி நம்பிக்கை அளித்துவரும் விவசாயிகளை அழைத்து தலா ஒரு லட்சம் கொடுத்து கவுரவப்படுத்தியது. மரு. கு.சிவராமனும் அந்த ஆலோசனைக்குழுவில் இருக்கின்றார்.

 

dr.sivaraman amuthu restaurant


இன்று நம் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முதலில் உழவினை மதிக்க வேண்டும். உழவர்களை மதிக்க வேண்டும். நம் நாட்டு உழவுப் பொருட்களுக்கு நல்ல சந்தை ஏற்படுத்தி, அவர்கள் பொருட்களின் மதிப்பைக் கூட்ட வேண்டும். தமிழகமெங்கும், இந்தியா முழுவதும், இந்திய விவசாயிகளிடம் பெறும் உழவுப் பொருட்களுக்கு, உரிய பணத்தை கொடுத்திட வேண்டும். அப்படிச்செய்தால் மட்டும்தான் நம் உழவை மீட்டெடுக்க முடியும். எல்லாவற்றிற்கும் அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்காமல், நம்மளவில், அன்றாட வாழ்வில் நம் உழவுப் பொருட்களுக்கு, நம் சிறுதானியங்களுக்கு இடம் கொடுத்தாலே யார் கையையும் எதிர்பார்க்காது நம் உழவன் பீடு நடை நடக்க முடியும். நம் தமிழ் நாட்டின் 5-6 கோடி மக்கள் அன்றாட தேவைக்கு, வெளி நாட்டுப் பொருட்களை நம்பியிராமல், டெல்டா மாவட்டத்தில், நெல்லை மாவட்டத்தில், கொங்கு மாவட்டத்தில் விளையும் பொருளை பயன்படுத்த துவங்கினாலே, நம் விவசாயிகளின் கண்ணீர் துடைக்கப்பட்டுவிடுமே.

 

dr.sivaraman amuthu restaurant


இந்த விஷயங்களை மனதில் கொண்டு, சரியான தரமான உழவுப் பொருட்களை கொள்முதல் செய்து, இரசாயன உதவிகளின்றி மதிப்பு கூட்டி, சுவை மிக்க உணவாக்கி அமுது உணவகம் இயங்க உள்ளது. கூடவே வெளிநாட்டில் பிரபலாமய் உள்ள fair trade practice எனும் உற்பத்தியில் இருந்து நுகர்வோர் வரை அத்தனை பேரும் பயன் பெரும் வணிகப் பயிற்சியை அமுது இங்கு செயல்படுத்த உள்ளது. அமுதில் இருந்து ஈட்டப்படும் நிகரலாபம், மீண்டும் விவசாயிகளிடம் பகிரப்படும். உழவிற்கு உதவி செய்ய அத்தொகை பயன்படும். 


 

இதை படிக்காம போயிடாதீங்க !