நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் வரும் மார்ச் 24ஆம் தேதி வரை பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்காக காலை அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திற்கு வந்தனர்.
அப்போது மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, நெற்பயிர்களுடன் சட்டமன்றத்திற்கு வந்தார். வேளாண் துறை பட்ஜெட் என்பதால் பா.ம.க.வினர் பச்சைத்துண்டு அணிந்து வந்தனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் வந்தனர்.