ADVERTISEMENT

தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பது தொடர் நிகழ்வுகளாகிவிட்டன! - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

06:01 PM Dec 03, 2019 | kalaimohan

நீர்நிலைகள், கோவில் குளங்கள் மற்றும் கடற்கரைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பது என்பது தொடர் நிகழ்வுகளாக இருப்பதாகவும், வார இறுதி நாட்கள், விடுமுறை, கோடை விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறை நாட்களில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் ஆழம் தெரியாத நீர் நிலைகள், பயன்பாடு முடிவடைந்த கல்குவாரிகள் போன்றவற்றை வேடிக்கை பார்க்கச் செல்வதாலும், குளிக்கச் செல்லும் போது ஆழம் தெரியாத பகுதிகளில் செல்பி எடுக்கச் செல்வதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி கடந்த 2014 -ஆம் ஆண்டில் மட்டும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 884 ஆக உள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 90 விழுக்காட்டினர் 12 வயதிற்குட்பட்டவர்கள் என்பது மிகவும் அதிர்ச்சியானதாக இருப்பதாகவும், இதேபோல் கடல் சீற்றம் மற்றும் கடலில் மூழ்கி இறப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சுற்றுலா தலங்கள், கோவில் குளங்கள், அருவிகள், கடல் பகுதிகளில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவ வாய்ந்தவர்கள் கொண்ட குழுவை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்க வேண்டும்.

சுனாமி தடுப்புச் சுவர் மற்றும் கண்கானிப்பு கோபுரங்களை கடற்கரை பகுதிகளில் அமைக்க வேண்டும் என கோட்டீஸ்வரி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு, உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் கோவில், குளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்து அறநிலையத் துறை இணை ஆணையர்கள் மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், தமிழகத்தில் உள்ள அருவிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள், சுற்றுலா தளங்களில் உயிரிழப்புகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து அறிக்கை பெற்று தாக்கல் செய்ய உத்தவிட்டதோடு, கடற்கரை பகுதிகளில் உயிரிழப்புகளை தடுப்பதற்காக மாநில அரசுக்கு இதுவரை ஒதுக்கிய நிதி தொடர்பான விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT