ADVERTISEMENT

வாக்குரிமையை உறுதி செய்ய வழக்கு தொடர்ந்த ஓட்டுநர்கள்.. வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்..! 

02:42 PM Jul 13, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


அடுத்த தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் எவரும் தங்கள் வாக்குரிமையை இழக்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களால் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை என்றும், அவர்களது வாக்குரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டது.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT