Advertisment

இறுதி ஊர்வலத்தில் தகராறு; வெடிகுண்டு வீசி டிரைவர் கொலை! 

 driver was passed away by dispute at a funeral procession

புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகர், ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசிப்பவர் ராஜி(32). லாரி டிரைவர். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். தேங்காய்திட்டில் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்திருக்கிறார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போதுபட்டாசு வெடித்த இருவரை ராஜி தாக்கியுள்ளார். இதனால் இறுதி ஊர்வலத்தில் தகராறு ஏற்பட்டது.

Advertisment

அதையடுத்து முதலியார்பேட்டை போலீசார் சென்று விசாரித்த போது ‘அனைவரும் உறவினர்தான். எங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்கிறோம்’ என கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட போலீசார் திரும்பிவிட்டனர். அதன் பிறகு இறந்தவரின் உடல் ஐந்தரை மணிக்கு தேங்காய்திட்டு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் வீட்டுக்கு வந்த ராஜி குளித்துவிட்டு வெளியே சென்று டிபன் வாங்கிக் கொண்டு இரவு வீட்டின் மாடிக்கு செல்ல புறப்பட்டார். அப்போது பின் தொடர்ந்து வந்த இருவர் திடீரென ராஜி முதுகில் நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் படுகாயமடைந்த ராஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார் விரைந்து சென்று ராஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

police driver Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe