/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a3891_0.jpg)
விருத்தாசலத்திலிருந்து கடலூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது இந்த பேருந்தை அரசுக்குழியை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மகன் முருகன்(53) என்பவர் இயக்கினார்.
ஊ.மங்கலத்தை அடுத்த வேப்பங்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் பேருந்து சென்றபோது , திடீரென ஓட்டுநருக்கு பக்கவாதம் வந்து, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்து நிலை தடுமாறி சாலையில் ஓரமாக இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து கரணம் தப்பினால் மரணம் என்பது போல சாலையோரம் இருந்த என்.எல்.சி ஓடையில் விழுந்திருக்க வேண்டியது. மயிரிழையில் விழாமல் நின்றுள்ளது. அவ்வாறு ஓடையில் விழுந்திருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.
இந்த விபத்தில் ஓட்டுநர் முருகன், பேருந்தில் பயணித்த திட்டக்குடியைச் சேர்ந்த பண்ருட்டி அரசுப் போக்குவரத்து பணிமனையில் கிளை மேலாளராகப் பணி புரியும் ரவி மற்றும் நடத்துநர் உட்பட 7 பேர்களுக்கு காயம் ஏற்பட, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த திடீர் விபத்து குறித்து ஊ.மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)